கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி ஜூனியர் டாக்டர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருந்த 6 மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 மருத்துவர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டாக்டர்கள் போராட்டம் நடத்தும் இடத்தை உள்துறை செயலாளர் நந்தினி சக்கரவர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி போனில் பேசினார்.
அப்போது முதல்வர் மம்தா, “உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற 4 மாத கால அவகாசம் கொடுங்கள்,” என்றார்.