மும்பை: நாளை மும்பை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் ராதி மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் நாளை (ஜூலை 12) நடக்கிறது. இதில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, மகாராஷ்டிரா வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்கிறார். அதன் பிறகு, இந்திய தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, சரத்சந்திர பவார் கட்சியின் சரத் பவார் மற்றும் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு பின், முதல் முறையாக, அகில இந்திய தலைவர்களை, மம்தா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.