உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து உரையாடினார். கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர், இந்த சந்திப்பு மூலம் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.

வாரணாசியில் பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர் அனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மக்களும் உற்சாகமாக பிரதமரை வரவேற்றனர். இந்நிகழ்வில் இரு நாடுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.
பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றம் போன்ற பல துறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியா–மொரீசியஸ் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இச்சந்திப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது.
இதேவேளை, பிரதமர் மோடி இன்று மாலை உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்று வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட உள்ளார். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து, மாலை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மக்கள் நலனுக்கான இப்பயணம், அரசின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.