ஸ்ரீநகர்: மத்திய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா கடிதம் எழுதியுள்ளார். மெகபூபா முப்தி தனது எக்ஸ்-தள பதிவில், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தைரியமாகவும் கொள்கை ரீதியாகவும் நிலைநிறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சீதாராமன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன்.

இன்றைய இந்தியாவில் எந்த விதமான கருத்து வேறுபாடும் குற்றமாக மாறி வருகிறது. அவர்களின் தெளிவான குரல்கள் புதிய காற்றின் சுவாசமாக வருகின்றன. “நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் வசிப்பவர்களாக, இந்த இருண்ட மற்றும் சவாலான காலங்களில் உங்கள் அசைக்க முடியாத நிலைப்பாட்டில் நாங்கள் ஆறுதலையும் உத்வேகத்தையும் காண்கிறோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் மூன்று மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.