ஹைதராபாத்: 72-வது மிஸ் வேர்ல்ட் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீக்கு, கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா முடிசூட்டினார்.

எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜி 2வது இடத்தையும், போலந்தின் மஜா கிளாஜ்தா 3-வது இடத்தையும் பிடித்தனர். ஓபல் 2024-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்றார். இதைத் தொடர்ந்து, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்று 3-வது இடத்தைப் பிடித்தார். 2022-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்தார். 2003-ம் ஆண்டு பிறந்த இவர், இளங்கலை பட்டம் (அரசியல் அறிவியல், சர்வதேச உறவுகள்) படித்து வருகிறார்.