
இன்றைய தேதியின்படி அரசு வழங்கும் அனைத்து சேவைகளிலும் செல்போன் எண் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக டிரைவிங் லைசன்ஸுடன் தொடர்புடைய தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் நேரடியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கே அனுப்பப்படுகின்றன. எனவே, மொபைல் எண் மாறும்போது அதை உடனே புதுப்பித்து வைப்பது அவசியம்.
மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் முதலில் சிஸ்டத்தில் உங்கள் தற்போதைய விவரங்களை உள்ளிட வேண்டும். அதன்பிறகு “Proceed” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய செல்போன் எண்ணையும் மாற்ற காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். சில மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு காரணமாக ஆதார் அங்கீகாரம் கேட்கப்படலாம்.

புதிய எண்ணுக்கு வரும் OTP-ஐ சரிபார்த்த பிறகு, உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக புதுப்பிக்கப்படும். பொதுவாக இந்த நடைமுறை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில இடங்களில் நேரடியாக RTO அலுவலகத்திற்குச் சென்று உறுதிப்படுத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
ஆன்லைன் வசதி மூலம் மொபைல் எண் மாற்றம் செய்யப்படுவது எளிதாகவும், சிரமமின்றியும் நடைபெறுகிறது. இதனால், டிரைவிங் லைசன்ஸ் சம்பந்தமான அனைத்து தகவல்களும் நீங்கள் பாதுகாப்பாக பெறலாம். உங்கள் புதிய எண் புதுப்பிக்கப்பட்டதும், அனைத்து அரசுத் தகவல்களும் அதே எண்ணுக்கு நேரடியாக அனுப்பப்படும்.