புதுடெல்லி: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பா.ஜ., எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி பேசுகையில், ”பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களிடமிருந்து வீடு, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பலன்களைப் பறித்து, ஆம் ஆத்மி அரசு டெல்லியை நரகமாக்கியுள்ளது.
யமுனை நதிக்கரையில் பல்லுயிர் பூங்கா அமைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவுச் சாலைகள், தலைநகர் டெல்லியில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடவுள் பூமிக்கு வந்தால் மட்டுமே இதுபோன்ற செயல்கள் சாத்தியமாகும். மற்றபடி மோடியால் மட்டுமே இதுபோன்ற அற்புதங்களை செய்ய முடியும். அதை வேறு யாராலும் செய்ய முடியாது.”