இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வான்பரப்பு மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ச்சியாக ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த நிலைமை, இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய ராணுவம் தொடர்ந்து ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்தத் தொடர்ச்சியான ஆலோசனைகள் பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.