நாக்பூரில் நடந்த ஒரு கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உலகம் முழுக்க உள்ள மோதல்களைத் தாண்டி ஒற்றுமையை உருவாக்க ஹிந்து மதம் தேவை என தெரிவித்தார்.
இன்றைய உலகம் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மதசார்புகள் காரணமாக மோதல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பன்முகத்தன்மையை ஏற்கவும், நிர்வகிக்கவும் கற்றுக்கொடுக்கும் மதமாக ஹிந்து மதம் தான் விளங்குகிறது என்றார்.

இந்தியர்கள் மதத்தை உண்மை என்றும், வாழ்வின் வழிகாட்டியாகக் கருதுவார்கள் என்றும் கூறினார். ஹிந்து மதம் இயற்கையை நேசிக்கிறது, இது மனித குலத்தின் மதம் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு இதயத்தையும் இந்த மதம் விழித்தெழச் செய்ய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்த மதம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது, பன்முகத்தன்மையை ஏற்கிறது. ஆனால் உலகம் இதை அறியாமல் மோதல்களில் சிக்கிக்கொள்கிறது. இந்த சூழலில் ஹிந்து மதத்தின் முக்கியத்துவம் உலகளவில் மேலும் கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.