ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. 307 வீரர்கள் மற்றும் 45 எழுத்தர் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 26,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “காஷ்மீர் இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 4,000 பேர் உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ தேர்வில் கலந்து கொண்டனர். தெளிவாக, காஷ்மீர் இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.