மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று மும்பையில் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி கூறியதாவது:- ரிலையன்ஸ் ஜியோ 2026-ம் ஆண்டின் நடுப்பகுதியில் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிடுவதன் மூலம் பங்குச் சந்தையில் நுழைய உள்ளது.

மேலும், ஜியோ தனது செயல்பாடுகளை வெளிநாடுகளில் விரிவுபடுத்த உள்ளது. இதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) உருவாக்க உள்ளது.
ஜியோ தற்போது 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.