நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரில் கும்பமேளா விழா நடைபெற உள்ளது. கும்பமேளா விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரில் கும்பமேளாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பமேளாவின் முதல் அமிர்த நீராடல் ஆகஸ்ட் 2, 2027 அன்றும், இரண்டாவது அம்ரித் நீராடல் ஆகஸ்ட் 31 அன்றும் நடைபெறும். மூன்றாவது மற்றும் நான்காவது புனித நீராடல்கள் செப்டம்பர் 11, 2027 மற்றும் செப்டம்பர் 12, 2027 ஆகிய தேதிகளில் நாசிக்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.