சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லைப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.