புதுடெல்லி: விமான போக்குவரத்து விதிமுறைகளை திருத்தும் வகையில் புதிய விமான போக்குவரத்து மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் விமான போக்குவரத்து சட்டம் 1934 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது மற்றும் அதன் விதிகளின்படி செயல்படுகிறது.
அதை முற்றிலும் மாற்றியமைத்து புதிய விதிமுறைகளுடன் “பாரதிய வாயுயான் விதேயக்” என்ற புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.
இதன் மூலம் 90 ஆண்டுகளாக அமலில் இருந்த விமான போக்குவரத்து சட்டம் முடிவுக்கு வரும். மசோதாவின் பெயர் ஹிந்தியில் இருந்ததற்கு வழக்கம் போல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.