இந்திய ரயில்வே, கயா மற்றும் கோயம்புத்தூர் இடையே 03679/03680 என்ற வாராந்திர சிறப்பு ரயிலை ஜனவரி 4 முதல் இயக்குகிறது. இந்த ரயில், பிரயாக்ராஜ் சியோகி, ஜபல்பூர், நாக்பூர், வாரங்கல், விஜயவாடா, காட்பாடி, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. தற்போது, கயா ஜங்க்ஷனில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதை காரணமாக, இந்த ரயிலின் முனையம் தற்காலிகமாக தன்பாத் ஜங்க்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த ரயில் கயாவிற்கு பதிலாக தன்பாத்திலிருந்து இயக்கப்படும்.
புதிய கால அட்டவணையைப் படி, ரயில் எண் 03679 தன்பாத்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 18 முதல் தன்பாத்திலிருந்து இயக்கப்படும். ஜனவரி 25, பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 தவிர ஒவ்வொரு சனிக்கிழமையும் இது இயக்கப்படும்.
அதேபோல், கோயம்புத்தூர்-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28, பிப்ரவரி 4 மற்றும் பிப்ரவரி 11-ஆம் தேதி தவிர ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும்.
மேலும், டெஹ்ரி (Dehri) என்ற இடத்தில் கூடுதல் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் எண்-03679 தன்பாத்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில், Dehri-on-Sone நிலையத்தில் இரவு 8:40 மணிக்கு நின்று 8:42 மணிக்கு அடுத்த பயணத்திற்காக புறப்படும். அதேபோல், ரயில் எண்-03680 கோயம்புத்தூர்-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில், Dehri-on-Sone-ல் காலை 6:48 மணிக்கு நின்று, காலை 6:50 மணிக்கு அடுத்த பயணத்திற்காக புறப்படும்.