மும்பை: ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. தற்போது, 5,12,18,28 சதவீதம் அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இந்த வரி விகிதம் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து ஆலோசனை நடத்த ஜிஎஸ்டி குறித்த ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஆலோசனை நடத்தி, வரி விகிதங்களைக் குறைத்து, வரியை மறுசீரமைக்க பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும். வரி விகிதங்கள் மற்றும் வரி அடைப்புகளை பகுப்பாய்வு செய்யும் பணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகத்தின் போது, வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 15.8 சதவீதமாக இருந்தது. 2023-ல் 11.4 சதவீதமாக குறைந்துள்ளது. இப்போது மேலும் குறையும். எனவே வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த பணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.