பெங்களூரு: பெண்கள் நினைத்ததை சாதிக்கவிடாமல் ஆணாதிக்கம் தடுத்திருந்தால், இந்திரா காந்தி எப்படி பிரதமராகியிருப்பார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிஎம்எஸ் பிசினஸ் பள்ளியில் மாணவர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த கேள்விக்கு, ‘கவர்ச்சியான முழக்கங்களால் ஏமாறாதீர்கள். நீங்கள் (பெண்கள்) உங்களுக்காக எழுந்து நின்று தர்க்கரீதியாகப் பேசினால், ஆணாதிக்கம் உங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைவதைத் தடுக்காது.
பெண்கள் சாதிக்க நினைத்ததை சாதிக்கவிடாமல் ஆணாதிக்கம் தடுத்திருந்தால், இந்திரா காந்தி எப்படி பிரதமராகியிருப்பார். ஆனால், பெண்களுக்கு போதிய வசதிகள் இல்லை. கூடுதல் வசதிகள் கண்டிப்பாக தேவை. புதுமையாளர்களுக்கு ஏற்ற சூழலை மோடி அரசு உருவாக்கி வருகிறது.
அவர்களுக்கான திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான சந்தையை உருவாக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என்றார்.