நீதா அம்பானி தனது ஆனந்தின் திருமணத்திற்கு 100 காரட் மஞ்சள் வைர நெக்லஸ் அணிந்திருந்தார். மும்பையைச் சேர்ந்த காண்டிலால் சோட்டாலால் என்ற கைவினைஞர் நகைக்கடைக்காரர்கள் இந்த நகைகளை உருவாக்கினர், அவர்கள் சுமார் 1,000 மணிநேரம் வேலை செய்தனர்.
காந்திலால் சோட்டாலாலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நெக்லஸின் சிறப்பம்சமாக, 100 காரட் மஞ்சள் வைரத்தைச் சுற்றியுள்ள சிக்கலான உருவங்கள், பின்னர் 80 காரட் எமரால்டு கட் சொலிடர் டிராப் உடன் இணைக்கப்பட்டு, ஐந்து வரிசைகளில் பிரமிக்க வைக்கும் சொலிடர்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ், முழு வைர ஸ்டுட்கள், சொலிடர் ஹேர்பின்கள் (மட்டல்) மற்றும் நெத்தி சுட்டி ஆகியவற்றுடன் நீதா அம்பானியின் அழகை மேம்படுத்துகிறது. இதனால் அவர் ராணி போல் காட்சியளிக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும் நீதா அம்பானி அணிந்திருக்கும் இந்த நகையின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனந்த்-ரத்திகா திருமணம் உலகின் மிக ஆடம்பரமான திருமணமாக மாறியுள்ளது. அதாவது முகேஷ் அம்பானி ரூ.5000 கோடி இந்த திருமணத்திற்கு செலவிட்டார்.
ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் நடந்த ஆனந்த்-ரத்திகா திருமணத்தில் நடிகை நயன்தாரா-விக்கி ஜோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர், இயக்குனர் அட்லீ-ப்ரியா மற்றும் சர்வதேச பிரபலங்களான கிம் கர்தாஷியன், ஜஸ்டின் பீபர், பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது