புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எம்ஐடி வேர்ல்டு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “ஒரு அரசன் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொண்டு அதை சுயபரிசோதனை செய்துகொள்வதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சோதனை.
இந்தியாவைப் பொறுத்தவரை கருத்து வேறுபாடுகள் ஒரு பிரச்சனையல்ல. யோசனைகள் இல்லாததுதான் பிரச்சனை. நாங்கள் வலதுசாரிகள் அல்ல. இடதுசாரிகளும் இல்லை. சந்தர்ப்பவாதிகள். எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தங்கள் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும்.
தீண்டாமை, சமூக சமத்துவமின்மை, மேன்மை போன்ற கருத்துக்கள் நீடிக்கும் வரை, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி முழுமையடைந்ததாகக் கூற முடியாது,” என்றார்.