புது டெல்லி: பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள, முதல்வர் நிதீஷ் குமார் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்த வழியில், வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சுய உதவித் திட்டத்தின் பலன் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.