புது டெல்லி: நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இது கூறப்பட்டுள்ளதாவது:- யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் வசூலிக்கப்படும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. இதுபோன்ற ஆதாரமற்ற ஊகங்கள் மக்களை தவறாக வழிநடத்தும். அவை தேவையற்ற பயத்தை உருவாக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
எனவே, யுபிஐ மூலம் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கும் திட்டம் இல்லை. இது நிதி அமைச்சகத்தால் கூறப்பட்டது. எம்டிஆர் என்பது ஒரு வணிகர் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணம் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும். வணிகர் தள்ளுபடி விகிதம் பரிவர்த்தனை தொகையின் சதவீதமாக வெளிப்படுத்தப்படுகிறது.

அரசாங்கம் அதிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் ரூ.25.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளன. என்பிசிஐ தரவுகளின்படி, இது முந்தைய மாதத்தை விட 5 சதவீத வளர்ச்சியாகும். ஏப்ரல் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.23.94 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் ரூ.1,789.3 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள் மே மாதத்தில் ரூ.1,867.7 கோடியாக அதிகரித்துள்ளன.