புவனேஸ்வர்: “”ஒடிசாவில் என்ஆர்ஐ திருவிழா நடைபெற உள்ளது. மாநிலத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய பெருமையை உலகம் முழுவதும் பரப்பும்,” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
ஒடிசாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்ஆர்ஐ திருவிழா இம்முறை புவனேஸ்வரில் நடைபெறுகிறது. மூன்று நாள் திருவிழா இன்று தொடங்குகிறது.
இதில் பங்கேற்க செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்கும், கோனார்க்கில் உள்ள சூரியன் கோயிலுக்கும் சென்றார். இவ்விழாவில் பங்கேற்க வரும் என்.ஆர்.ஐ.க்கள் கண்டிப்பாக பூரி, கோனார்க் கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்றார்.
ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நமது நாட்டின் கலாச்சார மற்றும் பாரம்பரிய பெருமைகளை உலகம் முழுவதும் பரப்ப ஒடிசாவுக்கு இந்த விழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.