புவனேஸ்வர்: ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி, ‘என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்ட பிறகு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இருக்க வேண்டும்’ என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் உதித் பிரதான் புவனேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் புத்ததித்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பதிவை நீக்கியுள்ள நடிகர் மொகந்தி, தனது பதிவிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ‘ராகுல் காந்தி குறித்த எனது பதிவு அவரை எந்த வகையிலும் குறிவைக்கவோ, புண்படுத்தவோ, இழிவுபடுத்தவோ இல்லை.
அவருக்கு எதிராக எதுவும் எழுத வேண்டாம். யாருடைய மனதையும் வேண்டுமென்றே புண்படுத்துவது எனது நோக்கமல்ல. இதற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.