கோவை: கோவை மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள், குளிர்பானத்தில் மதுவை கலந்து குடித்துள்ளனர். ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் இது உறுதியானதையடுத்து, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தள்ங்களுக்கு அருகில் மதுக்கடைகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு உள்ளது. அதுமட்டுமின்றி கோவையில் பள்ளிகள், கோவில்கள் அருகே ஆங்காங்கே மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, ’எப்.எல்.2′ மதுபானக்கடைகள், குடிபோதைக்கு அடிமையாகி குடியிருப்பு பகுதிகளில், காலை, 11:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இயங்கி வருகின்றன. அதேநேரம், பள்ளி சீருடையில் வருபவர்களுக்கு மது வழங்கக்கூடாது என பார் ஊழியர்களுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு மது கொடுப்பதற்காக ஒரு கும்பல் செயல்படுகிறது.
சமீபத்தில், கோவை மாநகராட்சிப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள், உடற்கல்வி வகுப்பின் போது, வகுப்பறையில் அமர்ந்து, குளிர்பானத்தில் மது கலந்து குடித்தது தெரியவந்தது. அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டு, ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
சம்மந்தப்பட்ட பள்ளியில், மது அருந்திய மூன்று மாணவர்களில் ஒருவர், தனது தந்தையின் பணத்தில் இருந்து ரூ.4,000ஐ எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டதாகவும், நண்பர்கள் மது அருந்தியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளியாட்கள் மூலம் மது பெற்று, குளிர்பானத்தில் கலந்து உடற்கல்வி வகுப்புகளின் போது குடித்ததாக தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் ‘கவுன்சிலிங்’ வழங்கப்பட்டது.