புதுச்சேரி: புதுவை வீராம்பட்டணத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுதர்சனன். இவர் கடலூர் சாலையில் உள்ள ஓட்டலில் தண்ணீர் பாட்டில் வாங்கினார்.
அதில், அதிகபட்ச விலை ரூ.20 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒரு ரூபாய் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.21 வசூலித்துள்ளனர். சுதர்சனன் புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கூறுகையில், ”ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் சட்ட வழிகாட்டுதல்களை மீறி ஓட்டல் குடிநீருக்கு ஜிஎஸ்டி வசூலிப்பது சட்ட விரோதம்.
இதற்கு, ஓட்டல் நிர்வாகம், தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலையாக ஜிஎஸ்டி தொகை ரூ.1, நஷ்டஈடாக ரூ.10,000, வழக்கு செலவுகள் ரூ.2,500 என ரூ.12,501 ஜிஎஸ்டி தொகையாக மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.