டெல்லி: ஓயோ ஹோட்டல்களில் இனி திருமணமாகாத தம்பதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இதுவரை, ஓயோ பிளாட்ஃபார்மில் இயங்கும் ஹோட்டல்களில் திருமணமாகாத தம்பதிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் போது தம்பதிகள் தங்கள் உறவுக்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்றும் ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் முதல் கட்டமாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
படிப்படியாக முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓயோ ஹோட்டல்களில் திருமணமாகாத தம்பதிகள் எந்த கேள்வியும் இன்றி அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஓயோ இந்த புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.