
இந்திய ராணுவத்தின் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சமாளிக்க உலக நாடுகளிடம் உதவி கோரும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், எதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள், பங்குச் சந்தை வீழ்ச்சி, மற்றும் உள்ளக பொருளாதார சிக்கல்களை மேற்கோளாகக் கொண்டு பாகிஸ்தான் கூடுதல் கடன் உதவியை நாடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவம், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு இந்திய மூப்படை தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, எக்ஸ் சமூக வலைதளத்தில் உலக வங்கிக்கு ஹேஷ்டேக் செய்து நிதி உதவிக்கு கோரிக்கை செய்தது. ஒரே நாளில் பாக் பங்குச்சந்தை 6,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இதன் பின்னணியில், பாகிஸ்தான் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியமிடமிருந்து 59,779 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. தற்போது, 17,000 கோடி கூடுதலாக கோர விரும்புகிறது.
இந்தக் கோரிக்கை சர்வதேச பார்வையில் சந்தேகத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர், பாக்., அரசு அந்தக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அந்த பதிவு தங்களால் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்தது.இந்த சூழ்நிலையில் இந்திய பத்திரிகை தகவல் ஆணையமான பி.ஐ.பி., பாகிஸ்தானை நகைச்சுவையாக விமர்சித்துள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில், ‘கோல்மால்’ படத்தின் காட்சி மற்றும் “இதுதான் பிச்சை எடுக்கும் முறையா?” என்ற கேள்வியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த இரட்டை வேடம், சர்வதேச நம்பிக்கையை மேலும் சிதைக்கும் அபாயத்தில் உள்ளது.