சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது.
இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்றும், தங்களின் நேர ஒதுக்கீடு மற்றும் சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு அணுகுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.