ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ட் கார்டுகள் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், பயனர்கள் கிப்ட் கார்டுகளை பயன்படுத்த முடியாமலிருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களின் பணம் முடக்கப்படுவதாக புகார்கள் குவிந்துள்ளன.
பவன் கல்யாண் கூறியதாவது, “எனது அலுவலகத்திற்கு கூட இந்த பிரச்சினை வந்தது. பயனர்களின் கஷ்டப்பட்ட பணம் காலாவதியான கிப்ட் கார்டுகள் மூலம் முடக்கப்படுவதாக நான் அறிந்தேன்.”

இந்த நிலை, அமேசான் பயனர்களுக்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என அவர் தெரிவித்தார். மேலும், 29 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அமேசான் சேவைகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தாத கணக்குகள் “டார்மெண்ட்” என்ற பெயரில் செயலிழந்துவிடுவதால், பணம் திரும்ப பெற முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விடுகிறது.
பவன் கல்யாண் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாத நிலை உள்ளது. அமேசான் மூலம் இந்தியாவில் 100 கோடிக்கு மேல் கிப்ட் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. ப்ரீபெயட் கட்டணத்துக்கான ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் ஒரு வருடம் செல்லுபடியாக வேண்டும். கணக்குகள் முன் அறிவிப்புடன் மட்டுமே முடக்கப்பட வேண்டும்.”
அவர், நுகர்வோரின் பாதுகாப்புக்காக, இந்த பிரச்சினையை தீர்க்க வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.