அமராவதி: காக்கிநாடா மாவட்டம் பிதாபுரம் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “ஆந்திராவில் அமைதி மற்றும் பாதுகாப்பு கணிசமாக மோசமடைந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது:-
உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கிறேன். உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யுங்கள், இல்லையெனில் உள்துறை அமைச்சகத்தை நானே கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீங்கள் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு கேட்பது மட்டுமல்ல. உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன.
அனைவரும் சிந்திக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்திடம் யாரும் எதுவும் கேட்க முடியாது. நான் செய்தால், நாங்கள் உ.பி.யில் இருப்போம். யோகி ஆதித்யநாத் போல் முதல்வர் இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கு எதுவும் மாறாது. எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார் பவன் கல்யாண். பவன் கல்யாணின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மற்றொரு மூத்த அமைச்சர் பி.நாராயணன், “துணை முதல்வர் என்ற முறையில், தவறுகளைச் சுட்டிக்காட்டி, அமைச்சர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல, பவன் கல்யாணுக்கு உரிமை உள்ளது,” என்றார்.