சென்னை: மறைந்த ராணுவ தளபதியின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள முப்படைகளின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) குடும்ப ஓய்வூதியத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்பு அலகாபாத்தில் உள்ள பாதுகாப்புக் கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திலிருந்து சென்னை பாதுகாப்புக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்குதல், ஆதார் விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் தற்போது எடுத்து வருகிறது.
இந்நிலையில், மறைந்த இந்திய ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் பத்மநாபனின் இறப்பு சான்றிதழ் கிடைத்த 48 மணி நேரத்தில், சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.
மறைந்த தளபதி பத்மநாபனின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதிய ஆணையை சென்னை பாதுகாப்புக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் இன்று வழங்கினார்.