ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மனோஜ் நேரில் ஆஜரானார். இந்த நிலையில், 10-வது குற்றவாளியான ஜித்தன் ஜாய் சார்பில் பங்களாவை ஆய்வு செய்யக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

அதே நேரத்தில், சிபிசிஐடி போலீசார் இதுவரை 7 முறை ஆய்வு செய்துள்ளதால், கொடநாடு பங்களாவை மேலும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.