புதுடெல்லி: தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பணம் எடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக்கின் படத்தை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது கிளைம் செட்டில்மென்ட் செயல்முறையை கணிசமாக சீரமைக்கும் மற்றும் பிஎஃப் கோரிக்கை நிராகரிப்பு தொடர்பான குறைகளை கணிசமாகக் குறைக்கும். இதுவரை பயனடைந்துள்ளனர், மோசமான அல்லது தவறான பதிவேற்றங்கள் காரணமாக கோரிக்கை நிராகரிப்புக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.