கரூர் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த துயரச் சம்பவம் குறித்து நேற்று இரவே பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். தனது சமூக வலைதளப் பதிவில் தமிழிலேயே, “அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடந்த இந்த சம்பவம் மாநில அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், மத்திய அரசின் இந்த நிவாரண அறிவிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எதிர்கால அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கூட்டநெரிசல் மேலாண்மைக்கு முக்கிய பாடமாக அமையும் என்று கூறப்படுகிறது.