புதுடெல்லி: ‘இசை மேதை இளையராஜா எல்லா வகையிலும் முன்னோடி’ என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியை லண்டனில் கடந்த 9-ம் தேதி திரையிடினார். ஆசியாவில் சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியை இளையராஜா சந்தித்து பேசினார். நமது இசை மேதையும், ராஜ்யசபா உறுப்பினருமான இளையராஜாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இணையற்ற இசைப் பயணம் – இது உலக அளவில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. அதில் பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.