புதுடெல்லி: மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நடப்பு நிதியாண்டு ஜூலை 23ம் தேதி. அதைத்தொடர்ந்து, ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 11) ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.