புதுடெல்லி: பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க திட்ட கமிஷனுக்கு பதிலாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் மத்திய நிதி அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வந்தனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.