புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு ஒரு சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் டில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் ஹிந்து மடமான ஜூனா அகாராவின் தலைவர் அவதேஷானந்த் கிரி மஹராஜ் உரைகளை வெளியிட்டார். ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த தொகுப்பில், 2015ஆம் ஆண்டு சுதந்திர தின உரையிலிருந்து கடந்தாண்டு வாரணாசியில் நடந்த நிகழ்வுகள் வரை பிரதமர் மோடி ஆற்றிய மொத்தம் 34 உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த உரைகள் அனைத்தும் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிக வாழ்க்கை குறித்தே கூறப்பட்டவை.
மேலும், ஆன்மிகத் தலைவர்கள் ஆச்சாரியா பிரக்யா சாகர் ஜி மஹராஜ் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியின் கருத்துகளும் இந்த வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.