காந்திநகர்: கூட்டுறவுத் துறையானது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
102வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி, காந்திநகரில் (குஜராத்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 2021ஆம் ஆண்டு இதே நாளில், கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவினார். தொடக்கம் இன்று வரை, ‘கூட்டுறவுகள் மூலம் செழிப்பு'” இது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கூட்டுறவு சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கூட்டுறவு துறையை தொழில்நுட்பம் நிறைந்த துறையாக அமைச்சகம் மாற்றியுள்ளது. கூடுதலாக, 54 க்கும் மேற்பட்ட முன்முயற்சிகள் மூலம், முழு கூட்டுறவு அமைப்பையும் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காக மாற்றியுள்ளது. கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவி நாட்டின் கூட்டுறவு அமைப்புக்கு புது வாழ்வு அளித்த பிரதமருக்கு அனைத்து கூட்டுறவு சகோதர, சகோதரிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் மீனவர்களின் வருமானத்தைப் பெருக்கி, சுத்தமான உணவு தானியங்களை நாட்டிற்கும் உலகிற்கும் வழங்கும் நோக்கில் கூட்டுறவு அமைச்சு முன்னேறி வருகின்றது. வரும் ஆண்டுகளில், கூட்டுறவு துறை வலுவடைந்து, வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்றார்.நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் கலந்து கொண்டார்.