2018 கர்நாடக சட்டசபை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. உ.பி., மாநிலம், சுல்தான்பூரில், பா.ஜ.க., தலைவர் விஜய் மிஸ்ரா தொடர்ந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது வாரண்டிற்குப் பிறகு, ராகுல் பிப்ரவரி 2024-ல் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

ஜூலை 26-ம் தேதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்த அவர், தான் நிரபராதி என்றும், தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளதாக ராகுலின் வழக்கறிஞர் தெரிவித்தார்.