ஜார்க்கண்டில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் கோடா மின் உற்பத்தி நிலையம் 1,496 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. அதானி பவர் (724 மெகாவாட்) பங்களாதேஷுக்கு அதிக மின்சாரம் வழங்கும் நிறுவனமாகும், அதைத் தொடர்ந்து பைரா (1,244 மெகாவாட்), ராம்பால் (1,234 மெகாவாட்) மற்றும் எஸ்எஸ் பவர் I (1,224 மெகாவாட்).
இந்நிலையில், டாலர் தட்டுப்பாட்டால், அதானி நிறுவனத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கான நிலுவைத் தொகையை, வங்கதேசம் உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் திணறி வருகிறது. பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டு (BBDP) அக்டோபர் 31-ம் தேதி வரை நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும், 170 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,500 கோடி) கடன் கடிதத்தை (LC) வழங்குவதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது.
கிருஷி வங்கி மூலம் கடன் கடிதம் வழங்க பிபிடிபி முயன்றாலும், அது மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி இல்லை என்று கூறப்பட்டது. மேலும், டாலர் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பாக்கி காரணமாக, வங்கதேசத்திற்கான மின்சாரம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 7-ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,200 கோடி) தொகையை செலுத்தாவிட்டால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்படும் என அதானி பவர் நிறுவனம் வங்கதேசத்துக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.