அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, கோயிலின் முதலாமாண்டு விழாவை நாளை முதல் 3 நாட்களுக்கு கொண்டாட முடிவு செய்துள்ளது. 3 நாள் விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் ராமர் கதாகாலேசபம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 3 நாள் விழாவையொட்டி அயோத்தி நகரம் உற்சாகமாக உள்ளது.