சென்னை: இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மூத்த தலைவரும் ஆவார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஆர்.சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனான சந்திப்புகளில் இனிமையான தருணங்கள் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் தொடர்ந்து பாடுபட்டார். இலங்கையில் வாழும் தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்திற்காக.