புதுடெல்லி: ‘தூய்மை இந்தியா’ திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட, ‘எக்ஸ்’ பதிவு:-
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் பலன்களை காட்டும் ஆய்வு முடிவுகள், ஊக்கமளிப்பதாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் குறைக்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது.
சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகள் நாட்டின் பொது சுகாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. இந்த விஷயத்தில் இந்தியா முன்வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் தனது சமூக ஊடக பதிவில், பிரிட்டிஷ் வார இதழான ‘நேச்சர்’ வெளியிட்ட கட்டுரையின் இணைப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் கழிப்பறை கட்டுமானம் மற்றும் குழந்தை இறப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கழிப்பறைகள் கட்டுவது அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கீழ்த்தட்டு மக்கள் மற்றும் கீழ் நடுத்தர மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தை விட, நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
ஆய்வின்படி, ஆண்டுக்கு 70,000 குழந்தை இறப்புகள் தவிர்க்கப்படுகின்றன.