டோக்கியோ: இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பயணத்தின் போது, ஜப்பானில் நடைபெறும் 15வது வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், “டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியா மற்றும் ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நிலையில், இந்த பயணம் ஒரு புதிய வாய்ப்பை தருகிறது. பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்களுடன் சந்தித்து விவாதிக்க ஆவலாக உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆகஸ்ட் 31ம் தேதி சீனாவுக்கு செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று, சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.