டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். பிப்ரவரி 14, 2019 அன்று, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது.
இந்த தாக்குதலின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- 2019-ல் புல்வாமா தாக்குதலில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்துகிறேன்.