உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.2,200 கோடிக்கு மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக சாலை, ரயில்வே, மின் உள்கட்டமைப்புத் துறைகளில் அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெறவுள்ளன. மோகன் சராய்-அடல்புரா சாலை, வாரணாசி-படோஹி சாலை, சித்தௌனி-ஷூல் தங்கேஷ்வர் சாலை மற்றும் ஹர்தத்பூரில் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சாலை அகலப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மின் விநியோகத்துக்கான ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ.880 கோடிக்கு மேல் மதிப்பில் நிலத்தடியில் மின் உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகளும் அடிக்கல் நாட்டப்படுகின்றன. சுற்றுலா மற்றும் பசுமை வளர்ச்சிக்காக ஆற்றங்கரை படித்துறைகள், குளங்கள், பூங்காக்கள் மற்றும் நகர்ப்புற வன மேம்பாட்டு பணிகள் தொடக்கமளிக்கப்படுகின்றன. இதற்காக காளிகா தாமில் மேம்பாடுகள், ரங்கில்தாஸ் குடியக குளம் அழகு நிர்மாணம், துர்காகுண்ட் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெறுகின்றன.
கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, நீர்நிலைகளில் நீர் சுத்திகரிப்பு, மிதக்கும் பூஜை மேடைகள் அமைத்தல் மற்றும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 47 கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் தொடங்கப்படுகின்றன. மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புற்றுநோய் மையங்களில் ரோபோடிக் அறுவை சிகிச்சை, சிடி ஸ்கேன் வசதிகள், ஹோமியோபதி மருத்துவமனை, விலங்கு பராமரிப்பு மையம் ஆகியவற்றும் துவக்கப்படுகின்றன.
பிரதேச ஆயுதப்படை காவலர்களுக்கான புதிய மண்டபம், பிரதமரின் கிசான் திட்டத்தின் 20வது தவணையாக ரூ.20,500 கோடி நேரடியாக விவசாயிகளுக்கு பரிமாற்றம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கான உதவி உபகரணங்கள் வழங்கல் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.