புதுடெல்லி: கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டாலர் செலவில் கலாசார மையம் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையம் 2023 பிப்ரவரியில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரால் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது.
இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ் கலாசார மையத்திற்கு தற்போது திருவள்ளுவர் கலாசார மையத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் போஸ்டில், “யாழ்ப்பாணத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்கிறோம்.
இது திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாற்று மற்றும் நாகரீக பிணைப்புக்கு சான்றாகவும் உள்ளது.