வாரணாசி: நிகழ்ச்சியில் பேசிய மோடி, “அனைவருக்கும் வளர்ச்சி என்ற கொள்கையின்படி, அனைவருடனும் இணைந்து நாட்டிற்காக உழைக்கிறோம். இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், தேச நலனுக்காக அல்ல, குடும்ப அடிப்படையிலான ஆதரவு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்டவர்கள், இரவும் பகலும் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாக இணைத்து முன்னேறி வருகிறது. காசி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். காசிக்கு வரும் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு வசதிகளைப் பாராட்டுகிறார்கள். “டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் காசிக்கு வந்துள்ளன. இது வளர்ச்சி.
2036 ஒலிம்பிக்ஸ் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு செயல்படுகிறது,” என்று அவர் கூறினார். கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருந்தனர்.