புதுடெல்லி: கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படாது என கேரள உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக, இயற்கை பேரிடர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களின்படி அவை மறுசீரமைக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமா என்ற உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வயநாடு எம்பி பிரியங்கா காந்தி வத்ரா தனது எக்ஸ்-சாலா பதிவில், “வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு, நிலம், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்துள்ளனர்.
ஆனால் அரசு கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. மாறாக, அவர்கள் கடன் மறுசீரமைப்பை மட்டுமே பெறுகிறார்கள். இது நிவாரணம் அல்ல. இது மிகப்பெரிய துரோகம். இந்த அலட்சியத்தை கண்டிக்கிறோம். “வயநாட்டில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். அவர்களின் வலி அலட்சியப்படுத்தப்படாது. நீதி கிடைக்கும் வரை அனைத்து மேடைகளிலும் குரல் எழுப்புவோம்,” என்று அவர் கூறினார்.